பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 4:56 PM GMT (Updated: 2022-05-11T22:26:39+05:30)

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

ஓசூர்:
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் வீரராகவன். இவருடைய மனைவி கற்பகம் (வயது 54). இவர் தனது பேத்தி பூஜாவுடன் ஒசூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கற்பகம் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story