ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு


ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 May 2022 4:56 PM GMT (Updated: 2022-05-11T22:26:41+05:30)

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சம்புபாளையா பகுதியை சேர்ந்தவர் அப்துல் அமீத் (வயது 42). தொழிலாளி. இவர் கோவில் விழாவில் கலந்து கொள்ள ஓசூருக்கு வந்தார். பின்னர் ஓசூர் அருகே உள்ள மோரனப்பள்ளி ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து ஓசூர் தீயணைப்பு நிலையம், அட்கோ போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் மூழ்கிய அப்துல் அமீத்தை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story