மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை


மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 May 2022 10:32 PM IST (Updated: 11 May 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளைபோனது.


விழுப்புரம்,

மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் பன்னீர்செல்வம் (வயது 52). விவசாயி. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பன்னீர்செல்வம் குடும்பத்தோடு நிலத்துக்கு சென்றுவிட்டார். 

மாலையில் வீட்டிற்கு வந்த பன்னீர்செல்வம் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று அவர் பார்த்தபோது பீரோவிலிருந்த 3 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story