மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி


மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
x
தினத்தந்தி 11 May 2022 5:36 PM GMT (Updated: 11 May 2022 5:36 PM GMT)

வாணியம்பாடியில் மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.

வாணியம்பாடி

தமிழக அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் ராஜேஷ் குமார் ஜெயின், வேலூர் ஆனந்த் சிங்வி, கல்லூரி முதல்வர் இன்பவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் எஸ். ராஜாமணி வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பிரவீன்குமார் டாட்டியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த 75 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சாரதி குமார், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி, திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வணிக மேலாண்மைத் துறை பேராசிரியர் சக்தி மாலா நன்றி கூறினார்.

Next Story