100 பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்
100 பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லாத ஆடுகள் வழங்கும் விழா சிவகங்கையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நாகநாதன் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த 100 பேருக்கு தலா 5 ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- தற்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஏழை, எளிய பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசின் சார்பில் விலையில்லாத ஆடுகள் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 1,500 மதிப்பில் 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. இதில் ஆதரவற்றவர்கள் மற்றும் விதவை களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் உதவி இயக்குனர் ஜோஸ் அய்யாதுரை மற்றும் கால்நடை டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story