வள்ளியூர் யூனியன் கூட்டம்


வள்ளியூர் யூனியன் கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 7:37 PM GMT (Updated: 2022-05-12T01:07:43+05:30)

வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது.

வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் கூட்டம், யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், ஆணையாளர்கள் நடராஜன், கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. யூனியன் பொது நிதியில் இருந்து ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் இருக்கன்துறை ஊராட்சி சங்கநேரி, நக்கனேரி மெயின் ரோட்டில் இருந்து கந்தகோனார்வீடு பகுதி வரையிலும் பேவர்பிளாக் சாலை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story