மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி + "||" + killed

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
முசிறி, மே.12-
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வேன் மோதி பலி
முசிறி அருகே ரெட்டியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் லோகநாதன் (வயது 26). சம்பவத்தன்று இவர்  சிட்டிலாரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று இருந்தார். பின்னர் அவர் அங்குஇருந்துமோட்டார்சைக்களில்ரெட்டியார்பட்டிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். தும்பலம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த வேன் லோகநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் மோதி பலி
திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (24). இவர் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அசாருதீன் பாலக்கரை பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அமர்ந்து இருந்தார்.  அப்போது திருச்சியில் இருந்து வாஸ்கோடகாமாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  இது குறித்த புகாரின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் கொத்தனார் சாவு
விபத்தில் கொத்தனார் சாவு
2. பாம்பு கடித்து வாலிபர் பலி
பாம்பு கடித்து வாலிபர் பலியானார்.
3. மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
கரூரில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி
திருச்சி அருகே பலத்த காற்றினால் கீழே சாய்ந்து கிடந்த பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.
5. மின்சாரம் பாய்ந்து காவலாளி - பெயிண்டர் பலி
திருச்சி அருகே பலத்த காற்றினால் கீழே சாய்ந்து கிடந்த பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.