தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2022 8:30 PM GMT (Updated: 11 May 2022 8:30 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சேதமடைந்த மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா நேமம் ஊராட்சியில் திருக்காட்டுப்பள்ளி-கல்லணை செல்லும் சாலையில்  நேமம் பிள்ளையார் கோவில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணன், பூதலூர்.
மின்கம்பத்தை சூழ்ந்த செடி-கொடிகள்
தஞ்சை ஒன்றியம் மருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குபட்டு, வேங்கராயன்குடிக்காடு மெயின் சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி-கொடிகள் வளர்ந்து அந்த மின்கம்பத்தை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு, விவசாய பணிகள் பாதிப்படைகிறது. மேலும் மின்கம்பிகள் சேதமடைந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மருங்குளம்.
தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்
தஞ்சையை அடுத்து வல்லம் பேரூராட்சியில் பெரியார் நகர் உள்ளது. இந்தநகரில் உள்ள தெருக்களில் போதிய வடிகால் வசதிகள் இல்லை. இதனால் 2-வது, 3-வது தெரு இணையும் இடத்தில் தெருவோரத்தில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்
-பொதுமக்கள், வல்லம்.

Next Story