சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு  திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 2:24 AM IST (Updated: 12 May 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்பூர், 
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு திராவிட மாணவர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர பாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் முருகன் வரவேற்றார். திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் புள்ளையண்ணன், மாநில பகுத்தறிவு பிரசார குழு அமைப்பாளர் அன்பழகன், மாநில அமைப்பாளர்கள் குணசேகரன், ஜெயராமன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழக நிர்வாகிகள் பேசும் போது, பெரியார் பல்கலைக்கழகம் பெரியாரின் கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு சமூக நிதி குழுவை அனுப்பி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாணவர் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story