தொழில்அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் திருட்டு


தொழில்அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 May 2022 9:28 PM GMT (Updated: 2022-05-12T02:58:57+05:30)

பெங்களூருவில் தொழில் அதிபர் வீட்டில் புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உரமாவு பகுதியில் வசிப்பவர் அரவிந்த், தொழில்அதிபர். இவர், தொழில் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது அவரது மனைவியும் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவில் அரவிந்த் வீட்டுக்கு திரும்பிய போது பீரோவில் இருந்த 250 கிராம் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி, பணம் உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது. அரவிந்த் வீட்டில் யசோதா மற்றும் சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் யசோதா வீட்டில் தான் இருந்து வருகிறார்.

  சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் இல்லாமல் இருந்தார். அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை பற்றிய எந்த தகவலும் அரவிந்திற்கு கிடைக்கவில்லை. கடந்த 3-ந் தேதி தான் சுப்புலட்சுமி வேலைக்கு சேர்ந்திருந்தார். இதனால் அவரே நகை, பணத்தை திருடிசென்றிருப்பதாக ஹெண்ணூர் போலீசில் அரவிந்த் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண்ணை வலைவீசி தேடிவருகிறாா்கள்.


Next Story