மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 10:23 PM GMT (Updated: 2022-05-12T03:53:32+05:30)

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னதானப்பட்டி,
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரகலா, செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேலம் மணியனூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 25), மணியனூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சேலம் டவுன் பட்டைக்கோவில் பகுதியை சேர்ந்த ஹரி (21) என்பது தெரிய வந்தது. இதில் மணிகண்டன், சிறுவன் இருவரும் சேர்ந்து மணியனூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மோட்டார் சைக்கிளை திருடியதும், ஹரி சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மொபட்டை திருடியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே மணிகண்டன் மீது அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள், ஹரி மீது கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story