ஆவடியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை


ஆவடியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2022 8:59 AM IST (Updated: 12 May 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கையால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆவடி,  

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது கஞ்சா மற்றும் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல்வேறு தொடர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மாத்தூர், எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 41), வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த ராஜ்குமார் (30), செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி (40), சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 4 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story