பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 6:15 PM GMT (Updated: 2022-05-12T23:45:35+05:30)

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை, 
மதுரை எஸ்.எஸ்.காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி கயல்விழி (வயது 46). சம்பவத்தன்று இவர் கணவருடன் மோட்டார்சைக்கிளில் பரவையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். விளாங்குடி மீனாட்சி மில் அருகே சென்ற போது அவர்கள் திடீரென்று கயல்விழி கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story