முதலிரவின் போது புதுமாப்பிள்ளை மாரடைப்பால் சாவு


முதலிரவின் போது புதுமாப்பிள்ளை மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 13 May 2022 2:52 AM IST (Updated: 13 May 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

ஹாவேரி அருகே முதலிரவின்போது புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஹாவேரி:

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்கோன் தாலுகா ஷேடாம்பி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா ஷேகப்பா சன்யாகா (வயது 34). இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கட்கிழமை திருமணம் நடந்தது. தனது வாழ்க்கை துணையுடன் இணைந்த மகிழ்ச்சியில் சிவானந்தா இருந்தார். இரவு 10 மணி அளவில் முதலிரவு அறையில் நுழைந்த சிவானந்தாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

உடனே அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருமணம் முடிந்த 10 மணி நேரத்தில் கணவரை இழந்த புதுப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும் சிவானந்தாவின் குடும்பத்தினருக்கும் பேரதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story