தர்மபுரியில் இன்று ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்


தர்மபுரியில் இன்று ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்
x
தினத்தந்தி 14 May 2022 12:35 AM IST (Updated: 14 May 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்.

தர்மபுரி:
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்.
பொதுக்குழு கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளரும், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள டி.என்.சி. விஜய் மஹாலில் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்று பேசுகிறார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பாட்டாளி இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசுகிறார். இதில் பா.ம.க. தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி கலந்து கொண்டு பேசுகிறார்.
வேண்டுகோள்
இந்த கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம் பெண்கள் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பசுமைத்தாயகம், சமூக ஊடகப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முடிவில் தர்மபுரி நகர செயலாளர்கள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story