அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்-அதிகாரி அறிவுறுத்தல்


அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்-அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 May 2022 7:17 PM GMT (Updated: 13 May 2022 7:17 PM GMT)

அரசின் நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இந்திய கால்நடை நல வாரிய அதிகாரி அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது தொடர்பாக இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினரும், கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.மிட்டல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்.கே.மிட்டல் கூறுகையில், ‘‘தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்ய வேண்டும்’’ என்றார்.

Next Story