பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர்,செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி நிர்வாக குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் தாளாளர் எம்.கே.பழனிச்சாமி அனைவரையும்வரவேற்று பேசினார். முதல்வர் எஸ்.பி.சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தமிழக சட்டசபை சபாநாயகர் எம்.அப்பாவு, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர்கலந்து கொண்டு கல்லூரியில் இளங்கலை, முதுகலை கல்வி பயின்று முடித்த 173 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்கள். விழாவில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி, நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், கல்லூரி பொருளாளர்எஸ்.ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் டி.ஏ.பொன்னுசாமி, எ.தனராணி உலகநாதன், துணைச்செயலாளர் ஆர்.மணி, கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளகோவில் ஸ்ரீஜெயம் டிரைவிங் ஸ்கூல் ஜி.ரமேஷ், அய்யம்பாளையம் பூபதி, முன்னாள் இணை செயலாளர் பி.வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story