திருச்சுழி அருகே வாகன சோதனை: கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல்


திருச்சுழி அருகே வாகன சோதனை: கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 May 2022 5:55 PM GMT (Updated: 16 May 2022 5:55 PM GMT)

கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காரியாபட்டி, 

கேரளாவுக்கு கொண்டு செல்ல இருந்த 36 பசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி போலீசார் கமுதி - அருப்புக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் லாரியில் 36 பசுமாடுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. மாடுகள் நிற்கும் இடத்தை விட்டு அசைய முடியாத அளவுக்கு அவை நெருக்கமாக நின்றிருந்தன. லாரியில் மாடுகள் படுத்துவிடாமல் இருக்க அவற்றின் கண்களில் தேய்க்க மிளகாய் வைத்திருந்ததும் தெரியவந்தது.

பசுமாடுகள் பறிமுதல்

மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த மாடுகள் அனைத்தும் பரமக்குடியிலிருந்து கேரளா சந்தைக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்ததால், லாரியையும் பசுமாடுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வகுமார் (வயது 40), மூர்த்தி (25), மாணிக்கம் (33) ஆகிய 3 பேர் மீது எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பசுமாடுகளை மதுரையில் உள்ள காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். லாரிகளில் மாடுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு தண்ணீர், தீவனம் கொடுக்காமல் சித்ரவதை செய்வதால் சிலநேரத்தில் மாடுகள் இறந்து விடுகின்றன. எனவே கால்நடைகளை துன்பப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story