வீடுகளில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு தயாரிப்பு
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜீக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில், சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் தேவமாதா, வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, வடக்கு தெரு, எஸ்.பி.எம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது விஜயரங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த மீனாட்சி புரம் சுரேஷ் (வயது 40) மீனாட்சிபுரத்தை சேர்ந்த சங்கர் (27) தாயில்பட்டி ஊராட்சி வடக்கு தெருவை சேர்ந்த முத்துராஜ் (40) ஆகியோரின் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 30 கிலோ தடைசெய்யப்பட்ட சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story