தேர்தல் செய்திகள்

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு + "||" + Rivers link in BJP election manifesto Welcome Rajinikanth

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு
பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து கூறப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த், என்னுடைய அரசியல்  நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என கூறினார்.

மேலும்  அவர் கூறும்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால்  நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் என கூறினார்.