தேர்தல் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு + "||" + BSP announces candidates for 16 seats in UP

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
லக்னோ, 

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில், 11 வேட்பாளர்களையும், 2–வது பட்டியலில் 6 வேட்பாளர்களையும், 3–வது பட்டியலில் 5 வேட்பாளர்களையும் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று 4–வது மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டது. அதில், 16 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் மாநில தலைவர் ஆர்.எஸ்.குஷ்வாகா, சேலம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.