7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்


7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
x
தினத்தந்தி 19 May 2019 9:15 AM GMT (Updated: 19 May 2019 9:15 AM GMT)

7-வது இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலில், ஒரு மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று 
நடைபெற்று வருகிறது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒரு மணி நேர நிலவரப்படி, வாக்குப் பதிவு சதவிகிதம் வெளியாகியுள்ளது. அதன்படி, 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகார் - 36.20%, இமாச்சல் பிரதேசம் - 42.38%, மத்திய பிரதேசம் - 45.81%, பஞ்சாப் - 37.86%, உத்தரபிரதேசம் - 37%, மேற்குவங்கம் - 49.79%, ஜார்கண்ட் - 52.89%, சண்டிகர் - 37.50% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story