சாம்ராஜ்நகரில் தசரா விழாவை நடத்த 14 குழுக்கள் அமைப்பு


சாம்ராஜ்நகரில் தசரா விழாவை நடத்த 14 குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 19 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-20T00:16:29+05:30)

சாம்ராஜ்நகரில் தசரா விழாவை நடத்த 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கன்னட கலாசாரத்துறை துணை இயக்குனர் குருலிங்கய்யா தெரிவித்துள்ளார்.

மைசூரு:

தசரா விழா

மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மாவட்ட வாரியாகவும் தசரா விழா நடத்த ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னட கலாசாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சாம்ராஜ்நகரில் நடைபெற இருக்கும் தசரா விழா குறித்து கன்னட கலாசாரத்துறை துணை இயக்குனர் குருலிங்கய்யா கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சாம்ராஜ்நகர் மைசூரு மாவட்டத்துடன் இருந்தது. பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு இரு மாவட்டமும் பிரிந்தது. அன்று முதல் இன்றுவரை சாம்ராஜ்நகரில் தனியாக தசரா விழா கொண்டாடப்படுகிறது.

14 குழு அமைப்பு

அதன்படி இந்த ஆண்டு தசரா விழா வருகிற 27-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு 14 தசரா குழுவினரை நியமித்துள்ளோம். அவர்கள் மேடை அமைப்பது, அடிப்படை வசதிகள், விளக்குகள், உணவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

இந்த முறை கலை நிகழ்ச்சிகளில் 60 சதவீதம் உள்ளூர் கலைஞர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தசரா விழா நிகழ்ச்சிகள் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அது குறித்து விவரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவா கூறினார்.


Next Story