சகாரா குழுமம் மீது வழக்கு தொடர விலக்கு மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி ‘வழக்கில் இருந்து விலக்கு உங்களுக்கா, சகாராவுக்கா?’


சகாரா குழுமம் மீது வழக்கு தொடர விலக்கு மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி ‘வழக்கில் இருந்து விலக்கு உங்களுக்கா, சகாராவுக்கா?’
x
தினத்தந்தி 5 Jan 2017 9:50 PM GMT (Updated: 2017-01-06T03:20:24+05:30)

சகாரா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2014-ம் ஆண்டு அதிரடி சோதனைகள் நடத்தினர். அதில், சில டைரிகள் கைப்பற்றப்பட்டன.

புதுடெல்லி,

சகாரா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2014-ம் ஆண்டு அதிரடி சோதனைகள் நடத்தினர். அதில், சில டைரிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில், குஜராத் முதல்-மந்திரி பதவி வகித்த நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுக்கு லஞ்சம் தரப்பட்டதாக பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இப்போது, வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனைகள் தொடர்பாக சகாரா குழுமத்தின் மீது வழக்கு தொடர்வதில் இருந்து விலக்கு அளித்து வருமான வரித்துறை தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி நேற்று காட்டமான கேள்வி விடுத்தார். அவர் டுவிட்டரில், “விலக்கு அளித்திருப்பது சகாராவுக்கா அல்லது மோடிக்கா? உங்கள் மனசாட்சி தெளிவாக இருந்தால், எதற்காக விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த விவகாரத்தில் மோடியை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் சாடி உள்ளார். அவர், “சகாரா அல்ல, மோடிதான் விலக்கு பெற்றுள்ளார். அவர் சகாராவிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார். அவர் லஞ்சம் பெற்றது உறுதியாகி இருக்கிறது” என கூறி உள்ளார். 

Next Story