உ.பி தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது


உ.பி தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
x
தினத்தந்தி 7 Jan 2017 9:43 AM GMT (Updated: 2017-01-07T15:13:50+05:30)

உத்தர பிரதேச தேர்தலில் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ளது.

லக்னோ,

பகுஜன் சமாஜ்கட்சி இன்று சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. மொத்தம் உள்ள 403 சட்ட மன்ற தொகுதிகளில் 300 தொகுதிகளுக்கு அக்கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்ட முதல் 100 வேட்பாளர் பட்டியலில் 36 பேர் முஸ்லீம் வேட்பாளர்கள் ஆவர். இரண்டாவது மற்றும் மூன்றாவது பட்டியலில் முறையே 22 மற்றும் 24 முஸ்லீம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாக்காளர்களில் 20 சதவீதம் பேர் மூஸ்லீம் மத பிரிவைசேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வாக்குகளை குறிவைத்து முஸ்லீம் வேட்பாளர்கள் முன்பை விட அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 403 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக  அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்து இருந்தார்.

மேலும், வேட்பாளர்களை வெகுநாட்களுக்கு முன்பே இறுதி செய்துவிட்டதாகவும் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்த மாயாவதி, மோடி அரசின் கீழ் சிறுபான்மையினருக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்குதான் ஆதரவாக போகும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொண்டு இருந்தார். முஸ்லீம் வாக்குகள் பிரிந்தால் அது பாரதீய ஜனதாவுக்கு பயனளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 3-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன

Next Story