வட மாநிலங்களில் பனி மூட்டம்: விமானங்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

x
தினத்தந்தி 8 Jan 2017 1:52 PM GMT (Updated: 2017-01-08T19:22:51+05:30)

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் கடந்த 2 வாரங்களாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

ஆலந்தூர், 

இந்த பனி மூட்டம் காரணமாக இன்றும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 15–க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 1 மணியில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்து சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story