ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பின்பேரில் ராகுல் காந்தி தலைமையிலான காங். குழு 14–ந் தேதி சீனா பயணம்


ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பின்பேரில் ராகுல் காந்தி தலைமையிலான காங். குழு 14–ந் தேதி சீனா பயணம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:04 PM GMT (Updated: 2017-01-09T03:34:56+05:30)

கட்சிகளுக்கு இடையேயான கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில் சீனாவில் உள்ள ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்பேரில் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு வ

புதுடெல்லி,

கட்சிகளுக்கு இடையேயான கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில் சீனாவில் உள்ள ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்பேரில் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு வருகிற 14–ந் தேதி சீன தலைநகர் பெய்ஜிங் செல்கிறது. இம்மாதம் 24–ந் தேதி வரை இந்த குழுவினர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்வார்கள்.

இந்த குழுவில் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த்சர்மா, ஜோதிர்ஆதித்யா சிந்தியா, செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் எம்.பி. ஆகியோர் இடம்பெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வந்த சீன கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதிகள் குழுவினர் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story