கிருஷ்ணா நதியில் போதிய தண்ணீர் இல்லை சந்திரபாபுநாயுடு பேட்டி

கிருஷ்ணா நதியில் போதிய தண்ணீர் இல்லை சந்திரபாபுநாயுடு பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2017 5:30 PM GMT (Updated: 10 Jan 2017 5:30 PM GMT)

கிருஷ்ணா நதியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. குறைந்த அளவே உள்ளது. தண்ணீர் எவ்வளவு உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். மக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

சென்னை

ஆந்திர மாநில முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கிருஷ்ணா நதியில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லை. குறைந்த அளவே உள்ளது. தண்ணீர் எவ்வளவு உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல சென்னைக்கு தண்ணீர் வழங்கப்படும். மக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

பண பரிவர்த்தனை 35 சதவீதம் வரை டிஜிட்டல் மயமாகி உள்ளது. இது ஓரிரு மாதங்களில் 50–ல் இருந்து 60 சதவீதம் உயரும். பணமில்லா பரிவர்த்தனையை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மத்திய–மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்.

ஆந்திராவில் கைரேகை மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. தற்போது ‘ஸ்மார்ட்’ செல்போன்களில் பண பரிவர்த்தனைகள் செய்யலாம். இதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story