தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி உளவுத்துறை எச்சரிக்கை + "||" + Airports across India alerted; militants could use camouflage to enter terminals

குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி உளவுத்துறை எச்சரிக்கை

குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி உளவுத்துறை எச்சரிக்கை
குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி உட்பட மாநில முழுவதும் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி மற்றும் மாநில முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக டெல்லி விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.