காங்கிரசில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாரதீய ஜனதாவில் இணைய முடிவு


காங்கிரசில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாரதீய ஜனதாவில் இணைய முடிவு
x
தினத்தந்தி 4 Feb 2017 5:06 AM GMT (Updated: 4 Feb 2017 5:05 AM GMT)

காங்கிரசில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாரதீய ஜனதாவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களுரு,

கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்தார்.. கடந்த 1968-ம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யான இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 1999-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து 2004 - 08 காலக்கட்டத்தில் மஹாராஷ்டிர ஆளுநரா கவும் பணியாற்றினார்.

 மீண்டும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்  காங்கிரஸ் இருந்து விலகினார். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறிவந்த எஸ்.எம் கிருஷ்ணா பாரதீய ஜனதாவில் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கர்நாடக பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். எஸ்.எம் கிருஷ்ணா பாரதீய ஜனதா கட்சியில் இணைவது 100 சதவீதம் உறுதி எனவும் விரைவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story