அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் சக்திகாந்த தாஸ்


அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் சக்திகாந்த தாஸ்
x
தினத்தந்தி 4 Feb 2017 10:55 AM GMT (Updated: 4 Feb 2017 10:55 AM GMT)

அடுத்த நிதி ஆண்டியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய வர்த்தக மற்றும் நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருக்கும்.  பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது. வரும் நிதியாண்டில் இருக்காது. டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பலரும் நகருகின்றனர். சர்வதேச அளவில் மந்தநிலை உள்ள நிலையிலும், இந்தியாவின் வளர்ச்சி வலுவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story