பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 7 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-08T03:12:32+05:30)

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 31–ந் தேதி உரை ஆற்றினார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அப்போது இந்த தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மாவும், வழிமொழிந்த பா.ஜனதா எம்.பி. வீரேந்தர் சிங்கும் சபையில் இல்லை என்று கூறி, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறை கூறி, எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் மோடி பதில் உரையில் சில விளக்கங்களையும் கோரினர். சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.


Next Story