டெல்லி மேல்–சபையில் தமிழக அரசியல் நிலை பற்றி கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு

டெல்லி மேல்–சபையில் தமிழக அரசியல் நிலை பற்றி கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 8 Feb 2017 11:30 PM GMT (Updated: 2017-02-09T01:58:13+05:30)

டெல்லி மேல்–சபை நேற்று காலை கூடியதும் தமிழக அரசியல் நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினரான டி.ராஜா குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

டெல்லி மேல்–சபை நேற்று காலை கூடியதும் தமிழக அரசியல் நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினரான டி.ராஜா குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மராட்டிய கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து வகிக்கிறார்’’ என்றார்.

அப்போது சபையை நடத்திய துணைத் தலைவர் பி.ஜே.குரியன் உடனடியாக குறுக்கிட்டு, ‘‘தமிழக மக்கள் தங்களை பார்த்து கொள்வார்கள். அவர்களுக்கு முடிவு எடுக்கும் திறமை உண்டு. அவர்கள் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறோம்’’ என்று கூறி டி.ராஜாவை மேற்கொண்டு பேச அனுமதிக்காததுடன் ‘‘இது தொடர்பான பிரச்சினையை யாரும் எழுப்ப வேண்டாம்’’ என்றும் கூறினார்.

Next Story