உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு


உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Feb 2017 10:46 AM GMT (Updated: 18 Feb 2017 10:46 AM GMT)

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் குப்தா, கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் எம்.சந்தான கவுடர், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

அதனை தொடர்ந்து 5 நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். 28 நீதிபதிகள் உள்ள நிலையில் இன்னும் 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story