ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
x
தினத்தந்தி 13 March 2017 3:13 AM GMT (Updated: 2017-03-13T08:43:09+05:30)

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துவருகிறது.

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சக்கந்த பாக் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மையத்தின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர்  நேற்று அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர். சிறிய ரக துப்பாகியால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இன்று  காலை மீண்டும் அதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்களை பாகிஸ்தான் படையினர் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  இதுவரை நடந்த துப்பாக்கி தாக்குதலில் உயிர்ச் சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது. 


Next Story