டெல்லியில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 9:15 PM GMT (Updated: 2017-04-07T00:59:52+05:30)

டெல்லியில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

புதுடெல்லி,

தையல் கலைஞர்களின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும், இ.எஸ்.ஐ. வசதி ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாபு, பொருளாளர் ஜெபாஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான தையல் கலைஞர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். கேரளாவில் இருந்து பெண் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.


Next Story