தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2017 11:15 PM GMT (Updated: 6 April 2017 8:03 PM GMT)

குழந்தைகள் ஆணையத்தில் காலியிடங்களை நிரப்பாத தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2005–ம் ஆண்டு சம்பூர்ண பெருவா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, சில மாநிலங்கள், மாநில குழந்தைகள் உரிமை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பாமல் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது. மாநில குழந்தைகள் ஆணைய காலியிடங்களை நிரப்பாத தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட 13 மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இந்த தொகையை 3 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் குழுவிடம் செலுத்த வேண்டும் என்றும், காலியிடங்களை 4 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story