இந்தோ-வங்காள பயணிகள் ரெயில் சோதனை ஓட்டம்: மோடி மற்றும் ஹசீனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்


இந்தோ-வங்காள பயணிகள் ரெயில் சோதனை ஓட்டம்:  மோடி மற்றும் ஹசீனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 8 April 2017 10:40 AM GMT (Updated: 8 April 2017 10:39 AM GMT)

இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான பயணிகள் ரெயிலின் சோதனை ஓட்டத்தினை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

பெட்ராபோல்,

புதுடெல்லியில் நடந்த வீடியோ கான்பரன்சிங் வழியேயான நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை அடுத்து இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை பகுதியில் அமைந்த பெட்ராபோல் நகரை பயணிகள் ரெயில் வந்தடைந்தது.  வங்காளதேசத்தின் குல்னா சிட்டி மற்றும் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இடையே ஓடும் இந்த பயணிகள் ரெயிலின் சேவை வருகிற ஜூலையில் இருந்து தொடங்கும்.

கடந்த 2001ம் ஆண்டு ஜனவரியில் சரக்கு ரெயில்களின் சேவைக்காக பெட்ராபோல் நகர் வழியேயான இந்தோ-வங்காள ரெயில் பாதை மீண்டும் தொடங்கப்பட்டது.

Next Story