ஜம்மு காஷ்மீர்:பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் தக்க பதிலடி


ஜம்மு காஷ்மீர்:பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் இந்திய ராணுவம் தக்க பதிலடி
x
தினத்தந்தி 8 April 2017 2:22 PM GMT (Updated: 2017-04-08T19:51:41+05:30)

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேரா பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த 3-ம் தேதி பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story