விமானத்தில் தகராறு செய்வோர் பட்டியல் தயாராகிறது - அமைச்சர்


விமானத்தில் தகராறு செய்வோர் பட்டியல் தயாராகிறது - அமைச்சர்
x
தினத்தந்தி 9 April 2017 10:06 AM GMT (Updated: 2017-04-09T15:35:48+05:30)

விமானங்களில் அடிக்கடி ஏதேனும் தகராறுகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை,

சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பயணிகளின் விவரங்களை (பயணியர் பெயர் பதிவு ஆவணங்கள் மூலம்) ஆதார் அல்லது பாஸ்போர்ட் விவரங்களுடன் இணைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

விமானங்களில் பறப்பதற்கான தடையை விமானத்தில் தகராறு செய்யும் பயணிகள் யாராக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தடை எந்த மாதிரியான தகராறு என்பதை பொறுத்து அமையும். எத்தகைய தகராறு என்பதை பொறுத்தே எத்தனை காலத்திற்கு தடை நீடிக்கும் என்பதும் அமையும்.

இந்தக்கட்டுப்பாடு உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என்கிறார் அமைச்சர்.

அவர் மேலும் கூறும்போது, ஒரே வருடத்தில் ரூ.200 கோடி செலவில் இதுவரை பயன்பாட்டிற்குள் இடம் பெறாத 33 விமான நிலையங்கள் விமான பயண வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

Next Story