இஸ்ரோவின் உதவியுடன் ஆந்திராவில் தடுப்பணைகள்; சந்திரபாபு நாயுடு முயற்சி

இஸ்ரோவின் உதவியுடன் ஆந்திராவில் தடுப்பணைகள்; சந்திரபாபு நாயுடு முயற்சி
x
தினத்தந்தி 10 April 2017 7:31 PM GMT (Updated: 2017-04-11T01:01:30+05:30)

இந்திய வானியல் ஆய்வு மையமான இஸ்ரோவுடன் உதவியுடன் ஆந்திராவில் இருபதாயிரம் தடுப்பணைகளை அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.

விஜயவாடா

இந்திய வானியல் ஆய்வு மையமான இஸ்ரோவுடன் உதவியுடன் ஆந்திராவில் இருபதாயிரம் தடுப்பணைகளை அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 இந்த இருபதாயிரம் தடுப்பணைகளை அமைக்க, வறட்சி பாதித்தப் பகுதிகளில் ஏற்படுத்த திட்டமிடப்படுகிறது. முக்கியமாக வறட்சி மிகுந்த ராயலசீமா பகுதியில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க விஞ்ஞானிகளும், புவியியலாளர்களும் ஒரு அணியாக இணைந்து கடந்த ஆறு மாதங்களில் எங்கெங்கு தடுப்பணைகளை அமைப்பது என்பதை அடையாளம் கண்டுள்ளனர். தடுப்பணைகளை அமைப்பதுடன் ஏற்கனவேயுள்ள கிராம ஏரிகளையும் சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் நீர் தட்டுப்பாட்டைத் தடுக்க நீர்-ஏற்றங்களையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகள் நீர் இருப்பின் அளவினை அறியவும், வானிலையை அறியவும் தனியே ஒரு ஆப்ஸ்சையும் உருவாக்கியுள்ளனர். நீர்க்குட்டைகளை அமைத்து விவசாயிகள் வறட்சியான காலங்களில் தேவையான நீராதரங்களை பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நீராதரங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்க இத்திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.

Next Story