பார்வை இல்லாமாணவி ஐ.ஐ.எம் கல்லூரியில் இடம் பிடித்து சாதனை


பார்வை இல்லாமாணவி ஐ.ஐ.எம் கல்லூரியில் இடம் பிடித்து சாதனை
x
தினத்தந்தி 11 April 2017 7:19 AM GMT (Updated: 2017-04-11T12:49:13+05:30)

குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 80 சதவீத பார்வை குறைபாடுகளுடன் அகமதாபாத் கல்லூரியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.


குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் பிராச்சி சுக்வானி. இவருக்கு பிறப்பிலே மக்குலார் தேய்வு  (Macular Dystrophy)  என்ற பார்வை குறைபாடு இருந்துள்ளது. இவர் 3-ஆம் வகுப்பு படிக்கும் போதே 80 சதவீதம் பார்க்கும் திறனை இழந்துள்ளார்.

இது மரபணு குறைபாடு என்பதால், இதனை சரிசெய்வதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தபோதிலும் தன்னுடைய முயற்சியால் பி.பி.ஏ பட்டம் பெற்றார். அதன் பின் தன்னுடைய பல நாள் கனவான ஐ.ஐ.எம்மில் படிக்க வேண்டும் என்பதற்காக, கேட் நுழைவுத் தேர்வையும் எழுதினார்.

அதில் அவர் 100 க்கு 98.55 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். கேட் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், அவருக்கு மூன்று சிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது.

அதில் அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனமும் அனுப்பியிருந்தது. இதனால் அவர் தன்னுடைய பல ஆண்டுகள் கனவான ஐ.ஐ.எம் அகமதாபாத்தையே தேர்ந்தெடுத்து கனவை நினைவாக்கிக் கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதன் பின் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து பார்வையற்றவர்களுக்காக ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story