ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் பலுசிஸ்தானை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் - சு. சுவாமி


ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் பலுசிஸ்தானை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் - சு. சுவாமி
x
தினத்தந்தி 11 April 2017 5:43 PM GMT (Updated: 2017-04-11T23:12:34+05:30)

இந்தியரான குல்பூஷன் ஜாதவ்வை பாகிஸ்தான் தூக்கிலிட்டால் பலுசிஸ்தானை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றார் பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி.

புதுடெல்லி

இந்தியரான குல்பூஷன் ஜாதவ்வை பாகிஸ்தான் தூக்கிலிட்டால் பலுசிஸ்தானை தனி நாடாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றார் பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி. 

இந்திய கப்பற்படை மாலுமியான ஜாதவ்வை உளவாளி எனக் கூறி பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் அவரை தூக்கிலிட தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து தனது ட்வீட்டரில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி இந்தியா ஜாதவ் தூக்கிலிடப்பட்டால் பதிலடியாக பலுசிஸ்தானை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும், என்றார். ”இந்தியா பலுசிஸ்தான் பிரதிநிதிகளை அயல்வாழ் அரசினை அமைக்கக் கோர வேண்டும்” என்றார் அவர்.

பாகிஸ்தானுக்கு அதன் பாணியிலேயே பதில் தர வேண்டும் என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்துறை செயலருமான ஆர் கே சிங். ”ஒவ்வொரு மாதமும் ஆயுதம் தாங்கிய பாகிஸ்தானியர் இந்திய எல்லைக்குள் பயங்கரவாதச் செயல்களுக்காக கைது செய்யப்படுகின்றனர். டெல்லி பாகிஸ்தான் போலவே நடந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டியதுதான்” என்கிறார் அவர். தற்போது கைது செய்யப்படுபவர்களை 10-12 வருடங்கள் சிறையிலடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்கிறோம். இந்தியா சட்டங்களை மாற்றி, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து அவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் மனதில் வைத்து ஜாதவ் விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே டெல்லியில் இந்திய-பாக் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் கசூரி இராணுவ நீதிமன்றம் பாகிஸ்தானியர்களையும் தூக்கிலடச் சொல்கிறது. ஜாதவ்வின் தூக்கு தண்டனையும் அத்தகைய ஒன்றே என்கிறார். ஆனால் இந்திய அரசு பாகிஸ்தானை ஜாதவ் விஷயத்தில் கடுமையாக எச்சரித்துள்ளது. இரு நாட்டு உறவில் இது ”விளைவுகளை” ஏற்படுத்தும் என்று எச்சரித்த இந்தியா, ஜாதவ்வினை காப்பாற்ற பொதுவான வழிகளிலிருந்து விலகி வேறு வழியிலும் முயற்சி செய்யும் என்றும் தெளிவாக கூறியுள்ளது.


Next Story