‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமா? தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்டு

‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமா? தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம்கோர்ட்டு
x
தினத்தந்தி 4 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-05T01:55:27+05:30)

மத்திய அரசின் பல்வேறு நிவாரண திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு நிவாரண திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணுடனும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.

அந்த விசாரணை நேற்று முடிந்தது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வரும்போது, ‘பான்’ எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமா என்பது தெரியவரும்.

Next Story