புனேவில் ஐடி ஊழியர் நயனா புஜாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு


புனேவில் ஐடி ஊழியர் நயனா புஜாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு
x
தினத்தந்தி 9 May 2017 1:28 PM GMT (Updated: 9 May 2017 1:28 PM GMT)

புனேவில் ஐடி ஊழியர் நயனா புஜாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

புனே,

புனேவில் ஐடி ஊழியர் நயனா புஜாரி கடந்த 2009-ல் 4  காமுகர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் 4 பேரில் ராஜூ சவுத்ஜிரி என்பவர் அப்ரூவராக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.  3 பேரும் மகேஷ் தாக்கூர், யோகேஷ் ராவத், விஸ்வஷ்கண்டன் ஆகியோருக்கு கொலை,கொள்ளை,கடத்தல் குற்றங்களை செய்ததால் தூக்கு தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Next Story