பேய் கூறியதாக தன் மகளின் காதை வெட்டிய தந்தை


பேய் கூறியதாக தன் மகளின் காதை வெட்டிய தந்தை
x
தினத்தந்தி 23 Jun 2017 9:25 AM GMT (Updated: 2017-06-23T14:55:23+05:30)

பேய் கூறியதாக சொல்லி தந்தையே மகளின் காதை வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

பேய் தன் மகளின் காதை வெட்ட கூறியதாக சொல்லி தந்தையே மகளின் காதை வெட்டியுள்ளார். வெட்டாவிட்டால் மகளை தன்னிடமிருந்து பிரித்து சென்றுவிடுவேன் என்று மிரட்டியதால் இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த அமிரிட் பகதூர் (வயது 35) கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து இரவு 1.30 மணிக்கு நன்றாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவரின் ஒன்றரை வயது மகள் சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளார்.இதன் தாக்கம் பகதூர்க்கு இருந்து வந்துள்ளது.தனது மனதில் பல பிரமைகளை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

அதனால் தன்னிடம் ஏதோ வந்து தன் மகளின் காதை வெட்டச் சொல்லி வற்புறுத்துவதாகவும், இல்லையெனில் தன் மகளை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விடும் என்ற பயத்தில் மகளின் காதை வெட்டியதாகவும் கூறுயுள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் விழித்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.அவர்கள் போலீசிற்கு போன் செய்ததை அடுத்து சம்பவ இடத்தை அடைந்த போலீசார் குழந்தையை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். பகதூரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை அன்று அதிகாலை புதுடெல்லியின் ஜிடிபி பகுதியில் நடந்துள்ளது.

இது பற்றி காவல்துறையிடம் கேட்ட போது பகதூர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளனர்.

பகதூர் தனது அண்ணன் இறந்தவுடன் 4 குழந்தைகளுக்கு அம்மாவான தனது அண்ணியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story