பாஸ்போர்ட்களில் இனி இந்தி மொழியும் இடம்பெறும் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு


பாஸ்போர்ட்களில் இனி இந்தி மொழியும் இடம்பெறும் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2017 1:38 PM GMT (Updated: 2017-06-23T19:08:01+05:30)

பாஸ்போர்ட்களில் இனி இந்தி மொழியும் இடம்பெறும் என்று மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

1967-ம் ஆண்டு  பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டு 50-ம் ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார்.  

அப்போது அவர் பேசியதாவது:

இனிமேல் பாஸ்போர்ட்களில் ஆங்கில மொழி மட்டுமல்லாமல், இந்தி மொழியும் இடம்பெறும். 8 வயதுக்கு உட்பட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% சதவீதம் சலுகைகள் வழங்கப்படும்.

பாஸ்போர்ட்டில் உள்ள விவரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story