கர்ணனுக்கு ‘பரோல்’ கிடைக்குமா? மேற்கு வங்காள கவர்னரிடம் மனு


கர்ணனுக்கு ‘பரோல்’ கிடைக்குமா? மேற்கு வங்காள கவர்னரிடம் மனு
x
தினத்தந்தி 24 Jun 2017 10:15 PM GMT (Updated: 24 Jun 2017 8:58 PM GMT)

கர்ணன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலில் விடுவிக்க வேண்டும் என்று மேற்கு வங்காள மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் முறையிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ். கர்ணனுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு அவர் தரப்பில் செய்த முறையீடுகளை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த கர்ணன், கடந்த 20-ந்தேதி கோவை மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை வழியாக கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. அதுவும் ஏற்கப்படவில்லை.

இதற்கிடையே அவர் திடீரென நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலில் விடுவிக்க வேண்டும் என்று மேற்கு வங்காள மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மனுவை கர்ணன் தரப்பில் அவரது வக்கீல், மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story