சகிப்புத்தன்மையின்மையை உருவாக்க முயற்சிகள், ஒற்றுமையாக இருக்கவேண்டும் - மம்தா பானர்ஜி


சகிப்புத்தன்மையின்மையை உருவாக்க முயற்சிகள், ஒற்றுமையாக இருக்கவேண்டும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 26 Jun 2017 9:02 AM GMT (Updated: 2017-06-26T14:32:24+05:30)

தேசத்தில் சகிப்புத்தன்மையின்மையை உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வரும்நிலையில் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.

கொல்கத்தா,


தேசத்தில் சகிப்புத்தன்மையின்மை சூழ்நிலையை உருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். 

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் இடையே வேற்றுமையை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். 

  “சில நேரங்களில் நம்முடைய தைரியம் மற்றும் உறுதியை காண்பிக்கவேண்டியது இருக்கும். தேசத்தில் சகிப்புதன்மையின்மை சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என நம்புகிறோம்; நாங்கள் எலோரும் எல்லாருக்காகவும் இருக்கிறோம். முதலில் நாம் அனைவரும் மனிதர்கள், பின்னர்தான் இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர்,” என மம்தா பானர்ஜி கூறிஉள்ளார். 

நாம் அனைவருக்காகவும் பணியாற்றுகிறோம், அவர்கள் இந்துக்களாக இருக்கலாம், இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்தவர், சீக்கியர் அல்லது ஜெயினாக கூட இருக்கலாம். நாம் உயிருடன் வாழும் வரையில் மனித நேயத்துடன் இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் வேற்றுமையை உருவாக்க யாரையும் அனுமதிக்க கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கவேண்டும். நம்மை யாராலும் பிரிக்க முடியாது. நாம் அனைவருக்கானவர்கள், அனைவருக்காகவும் நாம் போராடுவோம்.

 எலோரும் நன்றாகவும், உடல் நலத்துடனும் வாழ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் என கூறிஉள்ளார் மம்தா பானர்ஜி.

Next Story