டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்


டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2017 5:15 PM GMT (Updated: 2017-06-27T22:45:06+05:30)

டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஜூன்30-ம் தேதி நள்ளிரவு பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் துணை ஜனாதிபதி மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து ஆலோசிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story